அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டும், அருள்நெறி, சாட்டு நீட்டோலை ஆகியன உலக மக்களுக்கே தேவையான சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான சமூக போராட்டத்தையும், உழைப்போருக்கு உரிமைகள் பெறுவதற்கு வர்க்கப் போராட்டத்தையும் மக்களுக்கு வழிகாட்டுவதோடு 1848ல் காரல்மார்கஸ்,ஏங்கெல்ஸூம் இணைந்து உலக பாட்டாளி மக்களின் விடுதலைக்கும் உலக முதலாளித்துவச் சுரண்டலுக்கெதிராகவும் மக்கள் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு 'கம்யூனிஸ்டு அறிக்கையை வெளியிட்டமைக்கு முன்பே இந்த அய்யாவின் அகிலத்திரட்டு வழிகாட்டுவதாச் சொல்லலாம்.இந்தியாவின் பிரத்யேகமான மனித சமூத்தின் முன்னேற்றத்தின் முட்டுக்கட்டைகளாக இருப்பவைகளான சாதி, மதம்,ஆண்-பெண் பேதம் மூடநம்பிக்கை,மொழிப்பற்றின்மை பொருளாதார ஏற்ற தாழ்வு, ஆண்டான் அடிமை பாகுபாடு ஆகியனவே. இவைகள் குறித்து 1809 ல் குமரி முனையில் சுவாமித்தோப்பு எனுமிடத்தில் பிறந்த முத்துக்குட்டி சுவாமிகள் என்ற அய்யா வைகுண்டர் மிகச் சரியாகவே அவர் வாழ்ந்த காலத்தில் வேர்வைசிந்தி பாடுபட்ட உழைப்பாளி மக்களான சாணார் உட்பட பள்ளுப் பறை பதினெட்டுச்சாதியினரை மேல் சாதி நாயர் நம்பூதிரி களுக்கும் இவர்களின் கட்டுப்பாட்டில் அமைந்திருந்த திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்களும் புளு பூச்சிகளைப் போல படு கேவலமான முறையில் நடத்தினர்.இந்தியாவே சாதி என்ற அடித்தளத்தில் கட்டப்பட்டது என்பதை சரியாக இனங்கண்டு அதை உலுக்குகிறார்.
சாதிக் கொடுமைகள் கண்ட அய்யாவின் வைர வரிகள்;
'அறிந்து பல சாதி அன்பொன்றுக்குள்ளானால்
பிரிந்துமிக வாழாமல் பெரியோராய் வாழ்ந்திடுவீர்' (அகிலம் பக்கம் 129)
'பதிணென் சாதிகளும் பண்பாய் ஒருதளத்தில்
விதிவந்ததென்று மேவிக் குலாவியிருந்தார்' (அகிலம் பக்கம்263)
'இன்று முதல் யானிருக்கும் இடங்களிலே
ஒன்றுபோல் என்னிடத்தில் ஒத்துமிக வாரும்' (அகிலம் பக்கம்130)
'சாணான் இடையன் சாதி வணிகனுடன்
நாணாத காவேரி நல்ல துலுக்கப்பட்டர் முதல்
சூத்திரன் பிரமான் தோல் வாணியன் பறையன்
கம்மாளன் ஈழன் கருமறவன் பரவன்
வெம்மா நசுராணி வேகாண்டர் இடையர்
சக்கிலியனோடு சாதி பதினெட்டுகளும்
முக்கியமாக ஓடிவந்தார் அம்மானை!' (அகிலம் பக்கமு 262)
அன்று மேல் சாதி என்று கூறிக்கொண்டொரால் ஒடுக்கப்பட்ட பள்ளு பறை பதினெட்டுச் சாதியினர் அனைவரும் ஒன்றாக இணைந்து அடிமைத் தனத்திற்கெதிராக ஒன்றாக வந்தனரே என ஆனந்தம் அடைகிறார்.
ஆண்-பெண் சமத்துவம் வர வேண்டும் என குரல் கொடுத்தவர் தமிழகத்தில் சீர்திருத்த முன்னோடிகளில் தலையாயவர் இவர் எனச் சொல்லலாம்.
'
'ஆணும் பெண்ணும் கூடி ஆச்சாரஞ் செஞ்சிடுங்கோ'
'பெட்டைக் கோழி தட்டிக் கூவும்'
'பெண்பாவம் பாராதே' என்றெல்லாம் இன்றுபோல பல மடங்கு பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பார்த்தே அய்யா மனங்குமுறுகிறார்.
மகாகவி பாரதி தற்காலத்தில் ஆண்-பெண் திருமண முறையைக் கண்டு
'நல்ல விலை கொண்டு நாயை விற்பார்-அந்த
நாயிடம் யோசனை கேட்பதுண்டோ
கொல்லத்துணிவின்றி நம்மையும் அந்நிலை
ஆக்கிவிட்டார் பழி கூட்டி விட்டார்' என பாடுகிறார்.
இக்கொடுமை மாறவேண்டும் என்ற கனவோடு அய்யா
'மன்னனுக்கு ஏற்ற மதி மந்திரியும் தான் அறிய
இவன் இவளாம் என்று இனம் குறித்துப் பெண் பேசி
அவனி அறிய அலங்காரம் இட்டனரே' என்று
பெண்ணை கணவனுக்கு ஏற்ற இணையான வார்த்தையாக மதி மந்திரி என வார்த்தையை போடுகிறார். ஒருவருக்கொருவர் பார்த்து புரிந்து மணம் முடித்தல் சிறப்பு என்கிறார்.
ஆணும் பெண்ணும் சமத்துவமாகவே ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக
வாழ்வதை உறுதி செய்யவே-
'ஆணுக்கு ஒருபெண் அன்றூழி காலம் வரை
ஒண்ணுக்கு ஒண்ணு ஊழி காலம் வரையும்
வாழந்து இருப்பீர்கள் மக்கள் கிளையுடனே! ' என்று இறுதிகாலம் வரை
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழவேண்டும் என்றே உரைக்கிறார்
தமிழ்மொழி மேல் பற்று கொள்ளுதல்
'தமிழும் தமிழ் அறிவும் விடுதலை பெற்று உலகமெல்லாம் பரவும்
என்ற கனவோடு
'சேத்திரம் ஒன்று திருவிளக்கு ஒன்றாகும்
சாத்திர வேதச் சமயம் ஒன்றாய் நின்றியங்கும்'
மேலும்
ஆயும் கலைத்தமிழும் அறிவும் ஒன்றுபோல் பரவும்' என்கிறார்.
போலி ஆசாரங்கள் மூடநம்பிக்கை எதிர்ப்பு
கடவுள் பெயரில் காலங்காலமாக பொருள் கொள்ளை மக்களிடம் அடிப்பதற்கு அளவே இல்லை. இதை பார்த்தே அய்யா முழங்குகிறார்.
'காணிக்கை யிடாதுங்கோ
கைக் கூலி கேட்காதுங்கோ'
'பூசை புனக்காரம் பொய் கொண்ட தேரோட்டம்'
'ஆடு பன்றி கோழி ஆயனுக்கு வேண்டாங்கோ'
பலி கொடுத்து சாமியாட்டம் ஆடி குறிகள் சொலவது கூடாது என வலியுறுத்துகிறார்.

No comments:
Post a Comment