Monday, January 28, 2013

முதற்சங்கு ஜனவரி 2013 இதழுக்கு கருத்து


அன்புள்ள முதற்சங்கு ஆசிரியருக்கு வணக்கம்,
ஜனவரி மாதம் ‘முதற்சங்கு இதழ் படித்தேன்.மேலாண்மை பொன்னுச்சாமியின்என்னை உழுத புத்தகம்கட்டுரையில் உள்ளடக்கம்
‘சக்கரவர்த்தி பீட்டர், ‘பொன்னியின் செல்வன்ஆகிய நாவல்களின் சாராம்சத்தை அற்புதமாக அறிமுகப்படுத்தி அவற்றை வாங்கிப்படிக்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. கணிணி யுகத்திலும்
வாசிக்கும் கலாச்சாரம் மங்காது குறையாது என்ற உற்சாமூட்டல் சரியானதுதான். ஆனால் இளைய தலைமுறையில் அந்த வாசிப்புத் தன்மையை எப்படி விதைப்பது என்பது இங்குமங்கும் நடக்கிறது.அது பரவலாக்கப்பட இதுபோன்ற நூல்களின் மதிப்பீடு தொடர்ந்து வெளிவரவேண்டும். சாகித்ய அகாடமி யுவ புரஷகார் விருது பெற்ற    
  எழுத்தாளர் மலர்வதியின் ‘தூப்புக்காரி நாவல் வெளிவந்தவுடன் வாசித்துப் பாராட்டி, இக்கதையின் கரு யாரும் தொடாத பகுதியும் வித்தியாசமான ஒரு சமூக பிணைப்பை உருவாக்க எத்தணிக்கிற நாவல் என்றும் உயர்ந்த இடத்தில் பேசப்படக்கூடியதாக அமையும் என சின்னப்பபாரதி விருது வழங்கும் முன்பே ஆதங்கத்தோடு சொன்னேன்..சாகித்ய அகாடமியின் எல்லைக்குள் சென்றதே மிகப் பெருமை.அவருக்கு வாழ்த்துக்கள்.
  சிவ விவேகானந்தன் எழுதியுள்ள ‘என் தாய்மண்ணில் நான் நீண்ட கடித இலக்கியக் கட்டுரை நல்ல ஆரோக்கியமான விவாதம்தன்னை கிளப்பியிருக்கிறது. பல ஆதாரங்களோடு உண்மைகளை எடுத்துரைக்கிறார்.
இவர் எழுதிய ‘அய்யா வைகுண்டர் வாழ்வும் வழிபாடும்என்ற நூலை நானும் படித்தேன்.இதற்கு முன்பு பல எழுத்தாளர்கள் எழுதிய நூல்களிலிருந்து இது வித்தியாசமாக விசாலப்பார்வையோடு மிக முக்கியமான ஆவணமாக பரிணமித்துள்ளது. இந்நூலை சமூக மாற்றம் விரும்பும் மனித நேயமிக்க எழுத்தாளர்கள் வாசகர்கள் படித்தால், தமிழகத்தில்  சீர்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு நூல் எழுதிய அருணன் கிறிஸ்தவ மிஷினரிக்குப் பின் இரண்டாவது இடத்தை அய்யா வைகுண்டருக்குத் தருகிறார்.இக்கருத்து மிகச் சரியானது என்பதை சிவ விவேகானந்தனின் இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. இன்னும் சில கட்டுரையாளர்கள் சீர்திருத்தம் ‘வள்ளலார் முதல் என்று எ.ழுதுபவர்கள் ‘அய்யா வைகுண்டர் முதல் என்றுதான் எழுதுவார்கள்..ஏராளமான ஆவணங்கள் ,நூல்களைத் திரட்டி கடுமையாக உழைத்து வெளியிட்டது அவரின் எழுத்துலகில் முத்தாய்ப்பான பணி என வாழ்த்துகிறேன். பக்கம் 52ல் குறிப்பிட்டுள்ள ‘1809 ஏப்ரல் 19ல் பிறந்த வைகுண்டர்....24ஆம் வயதில் திருச்செந்தூர் கடலில் மூன்று நாட்கள் மூழ்கி தவம் இருந்து ஞானம் பெற்று வெளியில் வந்து கலியுகம் நீங்கி தர்மயுகம் தோன்றவும், சாதிக்கொடுமை அழியவும் ,பெண்களின் இழிநிலை மாறவும் தவம் இருந்தார்.கலிநீசனாம் திருவிதாங்கூர் மன்னன்,வைதீக சனாதனத்தை திணிக்கும் சாதி இந்துக்கள் ஆகியோரை அறவ.ழியில் பழிதீர்க்க எண்ணி ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றுதிரட்டினார்,.அனைத்து தர மக்களையும் தன்வயப் படுத்தி தன் இருப்பிடத்தில் ஒன்றாக கூட்டினார்.என்று குறிப்பிட்டு அகிலத் திரட்டு வரிகளான
    ‘சாணா ரிடையர் சாதி வணிகருடன்
    நாணாத காவேரி நல்ல துலுப பட்டர்முதல்
    சூத்திர பிரமாண் தோல் வாணியர் பறையர்
    உத்திர நீசர் உழவருடன் குறவர்
    கம்மாள ரீழர் கருமறவர் பரவர்
    வெம்மா நசுராணி வேகாண்ட ரிடையர்
    சக்கிலிய னோடு சாதி பதினெட்டுகளும் ‘ என்ற ஜீவ வரிகளை வெளிப்படுத்தியிருப்பது பெருமையே. இப்புத்தகம் காவ்யா பதிப்பகம் வெளியிட்டுருப்பது பெருமயே என்றாலும் தேசிய அளவில் சாகித்ய அகாடமி இடத்தையும் அடைந்திருக்கவேண்டும். இனியும் காலம் போகவில்லை சிவ விவேகானந்தன் அவர்கள் இப்பணியைச் செய்யவேண்டும். எனது ஆவல்.அய்யா சொல்ல அரிகோபாலன் சீடர் எழுதிய இவ்விலக்கியம் வெறும் எழுத்து மட்டுமல்ல மிகப் பெரிய இயக்கம்.செயல்பாட்டுத்தன்மையோடு தீண்டாமையை விரட்டியடிக்க 175 ஆண்டுகளுக்கு முனபே முத்திரிக் கிணறு உருவாக்கி கோவிலுக்கு வரும்முன்பு
‘சாதி பதினெட்டும் தலமொன்றிலே கூடி
கோதிக்குடித்து குளிக்கும் கிணறு
விதமான கிணறு வேறு இல்லை என்று அன்றைய காலத்தில் ஆண்ம பலம் வேண்டும். அகிலத்திரட்டு அம்மானையில் தலித் இலக்கியத் த்ததுவம்,வெண்ணீசன் என்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு , தாய்மொழிப்பற்றும்
அடங்குவதோடு
‘தாழக்கிடப்பாரைத் தற்காப்பதே தர்ம்ம
மாழக்கிடப்பார் மத த்தார் என்மகனே என்றும்
ஒன்னு சொன்னதை ஒன்னு கேட்டு
ஒருவருக்கொருவர் நிரப்பா யிருந்திடுங்கோ என்றஃ
சோசலிச சித்தாந்தம் உள்ளடக்கியதால் பொதுவுடைமைத் சித்தாந்தமே உள்ளடக்கியுள்ளதால் அடிமைத்தனம் ஒழிந்து தர்மயுகமாம் சோசலிசம் மலரவேண்டும் என்பதுதான் அவரின் கனவு என்பதால் உலக இலக்கிய
வரிசையில் இது இணைக்கப்பட்டிருக்க வேண்டும். என்பது என் கருத்து.ஆனால் பண்பாட்டுத் தளத்தில் இவரின் சீர்திருத்தக் கருத்துக்கள் மிகத் தாமதமாக ஆய்வாளர்களால் வெளிக்கொண்ர்ந்த காரணத்தாலும்
புராணங்களின், பாகவதங்களின் அடித்தளத்தில் வேர்வைசிந்துவோரின், பெண்களின், ஒடுக்கப்பட்டோரின் விடியல் ஏக்க்க் கட்டிடம் கட்டப்பட்டதால் புராணங்களைத் துணைக்கழைக்கும் வைதீக சிந்தை வளைத்துப் போட வாய்ப்பாகி விட்டதோ என்பதையும் ஆய்வு செய்யவேண்டும்.,
வைதீக பிராமணிய வழிபாட்டுக்கும் கட்டுப்பாட்டுக்கும் எதிராக வீரியக் குரல் ஒலித்துக்கொண்டிருந்தாலும், அகிலத் திரட்டின் அடிநாத சமத்துவ சாதிகளின் கலப்பை,மூடநம்பிக்கை எதிர்ப்பை சரியான முறையில் நடைமுறைப் படுத்தாத காரணத்தால் ‘குடத்தில் இட்ட விளக்காக போய் விட்டது.சில இடங்களைத் தவிர கடவுள் இல்லை என சித்தாந்தம் சொன்ன புத்தரை கடவுளாக்கியதைப் போல, தேசத்துக்கே அரசியல் சட்ட்ம் ஆக்கித் தந்த மாமேதை அம்பேத்கரையே ஒரு சாதிக்குள் முடக்கிப்போட்டதைப் போல,சமூகநீதிச் சூரியன் அய்யா வைகுண்டரை ஒரு சாதிக்குள் அடக்கிவைத்த தன்மையை எப்போது வெளியே கொண்டுவந்து புது விடியலுக்கு உயர்த்தப் போகிறோம் என்பதே கவலை. எனவேதான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அய்யாவின் வாழ்க்கைத் த்த்துவத்தை பள்ளி கல்லூரிகளில் கேரளாவில் கடந்த தோழர் அச்சுதானந்தன் அரசு பாடத்திட்டத்தில் சேர்த்த்தைப் போல தமிழகத்திலும் சேர்க்கவேண்டுமென கோரிக்கை மாநாடும் கலைப்பயணமும் நடத்தியது.

  ஹமீம் முஸ்தாபா எழுதிய ‘இன்னொசன்ஸ் ஆப் முஸ்லிம் திரைப் பிரதியும மதனிமார் கதையாடலும் கட்டுரை இத்திரைப்பிரதியை அருவருக்கத்தக்க வகையில் கையாண்டுள்ளார்கள் என்று வேதனையைப் பதிவு செயவதோடு இசுலாமியர்களுக்கு எதிர்கலைப் படைப்பும் எதிர் விமர்சனமும் தேவை என்பதை விளக்குகிறார்.
  இதழின் முதல் பக்கத்தில் வெளிவிந்துள்ள ‘திருமாவளவன் என் மதிப்புமிகு தலித் மக்களை சரயாக வழிநடத்தவில்லை?என்ற ஆசிரியர் பக்கத்தில் ஒரு சமூக அரசியல் கட்சி தலைவருக்கு வேண்டுதல் கொடுத்திருந்தாலும், இது ஒரு வாசகன் பார்வையில் உள்ளடக்க்க் கருத்தோட்டம் பற்றி மட்டும் சில நெருடல் ஏற்படுகிறது. ஆசிரயர் தமிழகத்தின் தலித் அமைப்புகளையும்,அவர்களின் கடந்த கால இயக்கங்களையும் இப்பகுதி மக்களின் சமூக அநீதி பிரச்சனைகளுக்கு எதிராக இயக்கம் நடத்திவரும் முற்போக்கு அமைப்புகளைப் பற்றியும் சரியாக புரிந்து கொள்ளாத தன்மையை வெளிப்படுத்துகிறது. ஆசிரியர், காதல் திருமணம் ஒருபோதும் சாதியை ஒழிக்கவில்லையென்றும் அதை ஆண்சார்ந்ந சாதிச்சான்றிதழே வழங்கப் படுகிறது என்று இலகுவாக மட்டும் பார்க்க கூடாது. இதையே உற்சாகப் படுத்து ஒரு புதுக கலாச்சாரமாக மாற்றுவதற்கு சாதி மறுப்பு திருமணம புரிந்தோருக்கு வேலைவாயப்பிலும் முன்னுரிமை  வழங்கவேண்டும் என்ற அடிப்படையில் அரசும் வழங்கி வருகிறது. பாதுகாப்பும் வழங்கவேண்டுமென மனித நேய அமைப்புகள் கோரிக்கை விடுக்கும் காலத்தில் தந்தை பெரியார் பிறந்த பூமியில் மாகவிஞர் பாரதி,புரட்சிக்கவி பாரதிதாசன், சங்க இலக்கியம் தொட்டு கதை கவிதையில் நாடகத்தில் திரைப்படத்தில் காதலை ஆக்ஸிஜனாக காற்றிலே கலக்கவிட்ட இத்தேசத்தில் காதலை மறுதலிப்பது தற்போது 51 அமைப்புகளின் சமுதாய பாதுகாப்பு பேரவைக்கும் ,தலித் அல்லாதார் பாதுகாப்பு பேரவைக்கும் துணைபோவதாக ஆகிவிடக்கூடாது.. அடுத்து ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய தலித் சமூகம் விடுதலை பெற வன்முறையைப் புறந்தள்ளவேண்டும்.நீதிமன்றம் மூலம் தீர்வுகாண முற்படுதல் நல்லது.என்று போதனையை ஆசிரியர் போதனை செயவது காலங்காலமாக இன்றுவரை அவமதிப்புக்கும், ஏளனத்துக்கும,தாக்குதலுக்கும்,புறக்கணிப்புக்கும் உள்ளாகி இருக்கும் வரலாற்று உண்மைக்கு புறம்பானதாக இருக்கிறது. காலந்தோறும் தமிழகத்தின் ஏராளமான கிராமங்களில் இன்னும் தீண்டாமையை கடைபிடித்து தலித் மக்களை ஒதுக்குகிற,ஒடுக்குகிற, இட ஒதுக்கீட்டின்படி காலியிடங்களில் இவர்களுக்கு வஞ்சிக்கிற நிறுவனங்களிடம்,தர்ம்புரியில் இரு குடும்ப்பங்களுக்குள் நடந்த காதல் திருமணத்தை ஆதிக்க சாதிக்கு அவமானமென கருதி அவ்வூர் மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை சகிக்கமுடியாமல் ஊரில் இளைஞர்களே இல்லாத சமயத்தில் 1000 முதல் 1500பேர் திரண்டு 350 க்கும் மேலான தலித் வீடுகளைச் சேதப்படுத்தி சொத்துகளை துவம்சம் செய்த ஆதிக்கசாதியினரிடம் ஆசிரியர்  போதனைசெயவதுதான் மிகச் சரியானது. அம்மக்கள்மீது காட்டும் அக்கரையுமாகும். இன்னும் எப்படி தலித் சமூகத்தின் பொருளாதார நிலை படு பாதாளத்தில் இருக்கிறது என்றும், வழிபாடு, சுடுகாடு டீக்கடை பொதுக்கிணற்றில் நீரெடுப்பது, ஆகிய விவகாரங்களில்,சேரிகளில் ஆண நாய் வளர்க்க்க் கூடாது என்ற கட்டளை ,உயர் பதவிகளில் வஞ்சிக்கப்படுகிற அவர்களிடமிருந்து வஞ்சிக்கப்பட்ட நிலம் ஆகயவற்றையெல்லாம் சமீப காலங்களில் விளக்கி பல புத்தகங்களும் ஆவணங்களும்ஃவெளிவந்துள்ளன.இவற்றையெல்லாம் உள்வாங்கி முதற்சங்கு இதழில் வெளியிடுவது தென்முனைச் சூரியன் அய்யா வைகுண்டர் கண்ட சமத்துவ கனவை நனவாக்கும் உன்னதமான செயலாகும்.

  
                                                        
   

   



No comments:

Post a Comment