. நம் தமிழ்நாடு
2
புதுமை
கண்டு வாழ இன்று
போர்
செயுந் தமிழ்நாடு- மறப்
போர்
செயுந் தமிழ்நாடு-மிக
முதுமை
கொண்ட மடமை வீழ
மோதிடும்
தமிழ்நாடு-வீழ
மோதிடும்
தமிழ்நாடு ( புதுமை)
திசையை
விண்ணை வென்று நின்று
சிரித்திடும்
தமிழ்நாடு-எழில்
சிரித்திடும்
தமிழ்நாடு-கொடி
அசைய
உயர மண்ணில் நிற்கும்
கோபுரம்
தமிழ்நாடு-கலைக்
கோபுரம்
தமிழ்நாடு
( புதுமை)
காவிரி
பாயுங் கழனி
கண்ணொளி
பெறும் நாடு-முக்
கண்ணொளி
பெறும் நாடு-பொழில்
பூவிரிநறும்
புனல் விரிந்திடும்
பூங்கொடி தவழ்நாடு-தமிழ்
பூங்கொடு
தவழ்நாடு ( புதுமை)
கைகள்
வளையின் ஒலியும் அலையும்
கவிதை
பேசும் நாடு-நற்
கவிதை
பேசும் நாடு-நம்
கைகள்
தழுவிக் காதல் புரியக்
கன்னியர்
வளர்நாடு-இளங்
கன்னியர்
வளர்நாடு
( புதுமை)
அலையும்
சிலம்பின் இசையும் மலரும்
அவிழ்ந்திடும்
தமிழ்நாடு-மலர்
அவிழ்ந்திடும்
தமிழ்நாடு-பனி
மலையும்
பொதிய மலையும் உறவில்
பொங்கிய
தமிழ்நாடு-மணம்
பொங்கிய
தமிழ்நாடு
( புதுமை)
கிளியி
னோடு பழகுங் காதல்
கிளிகள்
பேசும் நாடு-பெண்
கிளிகள்
பேசும் நாடு-புவி
வெளியில்
நடனம் பயிலும் அலையின்
நாதம்
பொங்கும் நாடு-கடல்
நாதம்
பொங்கும் நாடு
( புதுமை)
கம்பன்
தந்த அமுத முண்டு
களித்திடும்
தமிழ்நாடு-உளங்
களித்திடும்
தமிழ்நாடு-பசுங்
கொம்பர்மீது
குயில்கள் கவிதை
கொஞ்சிடும
தமிழ்நாடு-இசை
கொஞ்சிடும்
தமிழ்நாடு
( புதுமை)
காலம்
என்ற கடலின்மீது
கப்பலோட்டும்
நாடு-புகழ்க்
கப்பலோட்டும்
நாடு-இந்த
ஞாலமென்ற
மேடை கண்ட
நாடகத்
தமிழ்நாடு-ஒரு
நாடகத்
தமிழ்நாடு
( புதுமை)
உப்பு
விளையும் முத்து விளையும்
3
உணவு
விளையும் நாடு-நல்
உணவு
விளையும் நாடு-ஓர்
ஒப்பிலாத
உரிமை கொண்ட
உணர்வு
விளையும் நாடு-தமிழ்
உணர்வு
விளையும் நாடு ( புதுமை)
கவிஞர்
தமிழ்ஒளி அமுதசுரபி 1951