அனுபவமே தலைசிறந்த ஆசான். ஒருவனின் பலம் பலவீனம் அனுபவம் மூலமாகத்தான்
தெரிந்துகொள்ள முடியும். இயல்பான முறையில் சிறு வயதினர் முதல் பெரியவர் வரை
பேசும்போது புதிய சிந்தனை கிடைக்கும். பலம்,பலவீனம் புரிந்துகொள்வது, புதியன
கற்பது மனிதர்களிடம் மட்டுமல்ல. ஊர்வன,பறப்பன,நடப்பன ஜீவராசிகளிடமிருந்தும்தான்.
எதையும் உற்றுநோக்கினால் உலக வாழ்வியலே நம் கண்முன்னால் வந்து விரியும்.அடிமைகள்கூட தன்னுடைய நிலைபாட்டுக்கு என்ன காரணம் என்று
சிந்தித்துக்கொண்டே வந்தானென்றால் காரணம் கண்டறிந்து ஆர்ப்பரித்து எழுவான்.
அப்போது எந்த சக்தியும் அவனின் கோபாவேசத்தை தணிக்க முடியாது.அதுதான் முதல்
போராட்ட வரலாறே இயந்திரத்தில் உ.ழைத்துக்கொண்டிருந்த பெண்கள் சுரண்டலுக்கெதிரான
கோபத்தை தங்கள் இயந்திரத்தை உடைத்து நொறுக்கித்தான் காண்பித்தார்கள் இது முதல்
எதிர்ப்புச் சிந்தனை.எனவேதான் பட்டுக்கோட்டை 'நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம்
தரும் பயிற்சி' எனக் குறிப்பிடுகிறார்.