முப்பத்திமூன்று சதவீத இட ஒதுக்கீடு-இதை
சட்டமாக்க சமர்புரிவோம் போர்ப்பறையோடு
மனு அதர்ம பெண்ணடிமை நிலைப்பது சரியா?-இங்கு
ஆணுக்குப்பெண் சரிநிகர்சம் சாவது முறையா?
(முப்பத்தி மூன்று)
அறுபதாண்டு சுதந்திரமும் ஓடிப்போச்சுங்க-படிச்சும்
அடிமைத்தனம் பெண்களுக்கு உடைமையாச்சுங்க!
விதவதமா விண்வெளியில் ராக்கெட்டுதாங்க-இன்னும்
பெண்களுக்கு மட்டுமிங்கே கற்பு கணக்குங்க!
(முப்பத்தி மூன்று)
பிறப்பு முதல் இறப்பு வரை ஆணுக்கு அடிமை-பெண்
நிமிர்ந்து நடக்க பூமியிலே தடுக்குது மடமை
தேர்தல் கால வாக்குறுதி விண்ணைப் பொழக்குது-அரசு
ஆட்சிபீட மதவெறியில் மண்ணில் மடியுது!
( முப்பத்தி மூன்று)
சக்திபாதி சிவன்பாதி கதையிலதாங்க -இது
நிஜவுலகில் வந்ததுண்டா நீங்க சொல்லுங்க
ஒருகண்ணை குத்திவிட்டால் ஒளியுங்கிடைக்குமா?-இங்கு
பெண்ணினத்தின் திறமை புதைச்சா தேசம் வளருமா?
(முப்பத்தி மூன்று)
No comments:
Post a Comment