Saturday, July 16, 2011

குமரி அலையின் வரலாறு-பாடல்

புதுப்பாட்டு புதுப்பாட்டு நீ பாடு
பழுதியில் உழைப்போரின் புகழ்பாடு
ஐலசா பாடி அலையோடு மோதி
கடல்மீன்கள் கரைசேர்க்கும் புதுப்பாட்டு
                                      (புதுப்பாட்டு)
முக்கடல் அலையின் முத்தமிட்டுச்சத்தமிடும்
முப்பால் வள்ளுவத்தின் முதல்பாட்டு
சாதிமதவெறிப்பேய் சதிராடி வந்தாலும்
எதிர்கொண்டுவிரட்டிடும் இசைப்பாட்டு
                                                         
                                  (புதுப்பாட்டு)
தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்ம்ம
முழக்கமிட்ட வைகுண்டர் புகழ்பாடு
தீண்டாமைதனை ஓழித்து தோள்சேலை தனையுடுத்தச்
செய்திட்ட மீட் மால்ட்டு புகழ்பாடு
                                    (புதுப்பாட்டு)
சுசீந்திரத் தேர்மீது மூவர்ணக்கொடிகட்டி
சுதந்திரப் போரிட்ட போர்ப்பாட்டு
சேரியிலே வாழும் மக்கள் தொழுவதற்கு தடுத்திட்ட
தெருமறிச்ச சுவரிடிச்ச புதுப்பாட்டு
                                   (புதுப்பாட்டு)
அதங்கோட்டு ஆசான் செய்குதம்பிப் பாவலர்
கவிமணி ஜீவா வழிப்பாட்டு
கலைவாணர் என் எஸ் கே கவிமணிதாசனின்
காவியம் பாடிடும் புதுப்பாட்டு
                                   (புதுப்பாட்டு)  
மொழியுரிமை மக்கள்நலம் மூச்சாக  கொண்டிட்ட
ஜீ எஸ் மணி நேசமணி புகழ்பாடு
விடுதலைக்கு உயிரீந்த வேலுத்தம்பிதளவாய்
செண்பகராமனின் புகழ்பாடு.
                                  (புதுப்பாட்டு)

No comments:

Post a Comment